என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரேஷன் கார்டு
நீங்கள் தேடியது "ரேஷன் கார்டு"
எந்த இடத்திலும் ஒருநபர் கார்டுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்படாது என்று சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #TNAssembly #MinisterKamaraj
சென்னை:
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது விஜயதரணி (காங்) எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநபர் ரேசன் கார்டு பலருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். நாங்கள் தொகுதியில் ஆய்வு செய்தபோது ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்கள் பெரும்பாலானோர் தனியாக வசிக்கும் பெண்களாக உள்ளனர்.
அவர்களுக்கு கணவர் இல்லை. குழந்தைகள் ஆதரவு இல்லை. எனவே ஒருநபர் கார்டுகளுக்கு முகவரியை உறுதி செய்து பொருட்கள் வழங்குங்கள். ஆதார் அட்டையை கூட சரி பார்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு ரேசன் கடையில் பொருட்கள் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே ஒரு நபர் கார்டை ரத்து செய்யாதீர்கள் என்றார்.
இதற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநபர் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறுவது சரியான செய்தி இல்லை.
தமிழகத்தில் ஒருநபர் கார்டு அதிகரித்ததால் முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 33 ஆயிரம் கார்டுகள் மட்டும் ஒருநபர் கார்டு என கண்டறியப்பட்டது. அனைத்து பொருட்களை தனியாக பெறுவதற்காக இந்த கார்டை வாங்கியதாக தெரிகிறது.
ஆனாலும் ஒரு நபர் கார்டுக்கு 5 கிலோ அரிசி மட்டும் கிடைக்கும். எனவே எந்த இடத்திலும் ஒருநபர் கார்டுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்படாது.
அவ்வாறு எங்கேனும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNAssembly #MinisterKamaraj

ரேஷன் கார்டில் ஆதார் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். #Aadhaar #Rationcard
சென்னை:
போலி ரேஷன் கார்டுகளை தடுப்பதற்காக ரேஷன் கார்டுகளில் ஆதார் கார்டு எண் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் ரேஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள விவரங்கள் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
ஆதார் அட்டையில் தனி நபரின் விழி, விரல் ரேகை ஆகியவை பதிவாகி உள்ளன. எனவே ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கப்பட்டதன் மூலம் போலி ரேஷன் கார்டுகள் தடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் முன்பு 2.01 கோடி ரேஷன் கார்டுகள் இருந்தன. அதில் 6 கோடியே 77 லட்சம் உறுப்பினர்கள் விபரம் இடம் பெற்றிருந்தன. தற்போது 1 கோடியே 96 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 6 கோடியே 48 லட்சம் உறுப்பினர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஆதார் கார்டு இருந்தும் பலர் ரேஷன் கார்டுகளுடன் அதை இணைக்கவில்லை. ஒரு ரேஷன் கார்டில் 6 உறுப்பினர்கள் இருந்தால் அதில் 3 அல்லது 4 பேர் மட்டுமே ஆதார் எண் பதிவு செய்துள்ளன.
ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண்களை இணைத்தவர்கள் பெயர்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. விரைவில் விரல் ரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வழங்கும் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
எனவே ரேஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள அனைவருடைய பெயர்களும் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே ரேஷன் கார்டில் ஆதார் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ரேஷன் கடைகளில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Aadhaar #Rationcard

×

X